Latest Games :

Latest Post

வாய்ப்பை நழுவ விட்ட இந்தியா! தோல்விக்கு என்ன காரணம்?

Saturday, March 1, 2014 | 0 comments

ஆசிய கிண்ணப் போட்டியில் இலங்கை அணியிடம் இந்தியா 2 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இதற்கு இந்திய அணியின் மோசமான பீல்டிங்கே காரணம் என தெரிவிக்கப்படுகிறது, 5 முறை கேட்சை தவறவிட்டுள்ளனர்.
* இலங்கை தொடக்க ஆட்டக்காரர் குசல் பெரேரா 7 ஓட்டங்களில் ஆடிக் கொண்டிருந்த போது கொடுத்த நல்ல கேட்ச் வாய்ப்பை, ரஹானே, ஷிகர் தவான் இருவரும் பிடிக்க முயற்சித்து முட்டி மோதி கோட்டை விட்டனர். ஒருவர் மட்டுமே ஓடி வந்திருந்தால் கேட்ச் செய்திருக்கலாம்.
*திரிமன்னே 5 ஓட்டங்கள் எடுத்திருந்த போது, வலுவாக அடித்த பந்தை அந்தரத்தில் பாய்ந்து ஜடேஜா பிடிக்க முயற்சித்தார், அது தவறியது.
* 38 ஓட்டத்தில் இருந்த போது குசல் பெரேராவுக்கு, மறுபடியும் ஜடேஜாவின் உருவத்தில் கருணை கிடைத்தது. ஜடேஜாவின் கையில் பந்து சரியாக விழுந்த போதிலும், கண்ணிமைக்கும் நேரத்தில் நழுவிப் போனது.
* சங்கக்கரா வழங்கிய வாய்ப்பை வீணடித்ததன் விளைவு தான் இந்தியாவுக்கு பேரிடியாக அமைந்தது. அவர் 30 ஓட்டங்களில் ஆடிக் கொண்டிருந்த போது, ஜடேஜாவின் பந்து வீச்சில் ஸ்டம்பிங் ஆகியிருக்க வேண்டியது.
அவர் கிரீசை விட்டு வெளியே நின்ற போது பந்தை சேகரித்த விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் உடனடியாக ஸ்டம்பை தாக்க முயற்சித்த போது கை ஸ்டம்பில்படவில்லை. பிறகு 2வது முயற்சியில் அடிப்பதற்குள் சங்கக்கரா கிரீசுக்குள் வந்து தப்பி விட்டார்.
* இலங்கை அணி வெற்றியின் விளிம்பில் இருந்த போது கூட கடைசி ஓவரின் முதல் பந்தில் திசரா பெரேரா வழங்கிய எளிதான கேட்ச்சை மிட்–ஆப் திசையில் நின்ற ஷிகர் தவான் வீணடித்தார்.
Continue Reading

புதிய அணித்தலைவர் ரெய்னாக்கு வாழ்த்துக்கள்

Friday, March 19, 2010 | 0 comments

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் டெல்லியில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சேவாக் 38 பந்துகளில் 10 பவுண்டரி, 3 சிக்சருடன் 74 ரன்கள் எடுத்தார் மன்ஹஸ் 22 பந்துகளில் 32 ரன்களும், பாட்டியா 9 பந்துகளில் 1 பவுண்டரி, 2 சிக்சருடன் 21 ரன்களும், தில்சான் 24 பந்துகளில் 15 ரன்களும் எடுத்தனர்.

சென்னை அணி சார்பாக பந்துவீச்சில் முரளிதரன் சிறப்பாக பந்து வீசினார் இவர் இரண்டு விக்கெட் வீழ்த்தினார் (தில்சான் ,சேவாக் )

அடுத்து களம் இறங்கிய சென்னை அணி 19.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஹைடன் 43 பந்துகளில் 9 பவுண்டரி, 7 சிக்சருடன் 93 ரன்கள் எடுத்தார். ரெய்னா 34 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சருடன் 49 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். தமிழக வீரர்கள் பத்ரிநாத், முரளி விஜய் தலா 14 ரன்கள் எடுத்தனர்

புதிய அணித்தலைவர் ரெய்னாக்கு வாழ்த்துக்கள்
Continue Reading

அதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தும் மோசமான செல்போன்கள்!

Thursday, March 18, 2010 | 0 comments

செல்போன்கள் இன்றைய அத்தியாவசியங்களில் தவிர்க்கவே முடியாத அளவுக்கு மாறிவிட்டது. ஆனால் இதே செல்போனால் மனிதனுக்கு வரும் ஆபத்துகள், உடல் நலக் கோளாறுகள் குறித்து நாளும் ஒரு செய்தி வெளியாகி புளியைக் கரைத்து வருகிறது.
அமெரிக்காவின் சுற்றுச்சூழல் அமைப்பு (ஈடபிள்யூஜி) சமீபத்தில் ஒரு செல்போன் பட்டியலை வெளியிட்டது.

இதில் ஆப்பிள், எல்ஜி, சாம்சங், எச்டிசி, மோட்டாரோலா, பிளாக்பெரி உள்ளிட்ட 10 முன்னணி நிறுவன பிராண்ட் செல்போன்களைப் பயன்படுத்துவதால் அணுக்கதிர் வீச்சு பாதிக்கப்பட்டு மூளைப் புற்று நோய், இதயம் பாதிப்பு உள்ளிட்ட கொடிய நோய்கள் உண்டாக வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

ஒவ்வொரு செல்போனும் வெளிப்படுத்தும் கதிர்வீச்சின் அளவை வைத்து இந்த லிஸ்ட் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ரேடியேஷன் அளவை Specific Absorption Rate எனப்படும் SAR அலகைக் கொண்டு கணக்கிடுகிறார்கள்.

அந்த லிஸ்ட்:

மோட்டாரோலா ட்ராய்ட் (Motorola Droid)

அதிகபட்ச ரேடியேஷன் – 1.50 W/kg
காதில் வைக்கும் போது SAR அளவு – 1.49 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 1.50 W/kg

ஆப்பிள் ஐபோன் 3 ஜி – ஜிஎஸ்எம் 850 (Apple iPhone 3G S)

அதிகபட்ச ரேடியேஷன் – 1.19 W/kg
காதில் வைக்கும் போது SAR அளவு – 0.63 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.52 W/kg
எச்டிசி நெக்ஸஸ் ஒன் (HTC Nexus One)

அதிகபட்ச ரேடியேஷன் – 1.39 W/kg
காதில் வைக்கும் போது SAR அளவு – 0.87 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 1.39 W/kg

பிளாக்பெர்ரி – போல்ட் 9700 (Blackberry Bold 9700)

அதிகபட்ச ரேடியேஷன் – 1.55 W/kg
காதில் வைக்கும் போது SAR அளவு – 1.55 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.77 W/kg

சாம்சங் இன்ஸ்டிங்க்ட் எச்டி (Samsung Instinct HD)

அதிகபட்ச ரேடியேஷன் – 1.16 W/kg
காதில் வைக்கும் போது SAR அளவு – 1.16 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.71 W/kg

மோட்டாரோலா க்ளிக் (Motorola Cliq)

அதிகபட்ச ரேடியேஷன் – 1.10 W/kg
காதில் வைக்கும் போது SAR அளவு – 0.69 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 1.10 W/kg

மோட்டாரோலா ப்ரட் (Motorola Brute i680)

அதிகபட்ச ரேடியேஷன் – 0.86 W/kg
காதில் வைக்கும் போது SAR அளவு – 0.59 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.86 W/kg

பேண்டக் இம்பாக்ட் (Pantech Impact)

அதிகபட்ச ரேடியேஷன் – 0.92 W/kg
காதில் வைக்கும் போது SAR அளவு – 0.72 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.92W/kg

எல்ஜி சாக்லேட் டச் (LG Chocolate Touch)

அதிகபட்ச ரேடியேஷன் – 0.46 W/kg
காதில் வைக்கும் போது SAR அளவு – 1.46 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.79W/kg

சாம்ஸங் மிதிக் (Samsung Mythic)

அதிகபட்ச ரேடியேஷன் – 1.08 W/kg
காதில் வைக்கும் போது SAR அளவு – 0.67 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.64W/kg
ஜிஎஸ் எம் 1900 மாடல் இது.

மோட்டாரோலா மற்றும் சாம்சங் குழும தயாரிப்புகளே இந்த பட்டியலில் அதிகமாக இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

எனவே செல்போன் வாங்கும் வாங்கும் முன் அல்லது பயன்படுத்தும் முன் இந்த கதிர்வீச்சு சமாச்சாரத்தையும் கவனத்தில் கொள்ளவும்!
Continue Reading

டைவிங் திறமை காணாமல் போய்விட்டது : யுவ்ராஜ் சிங்

| 0 comments

கடந்த சில மாதங்களாக காயங்களால் அவதியுறுவதால் தனது டைவ் அடித்து ஃபீல்டிங் செய்யும் திறமை காணாமல் போய்விட்டது என்று இந்திய அதிரடி இடது கை பேட்ஸ்மென் யுவ்ராஜ் சிங் தெரிவித்துள்ளார்."கடந்த 4 மாதங்களில் இந்த காயங்கள் எனக்கு ஏற்பட்டது என்பது துரதிர்ஷ்டவசமானது, இந்த ஆண்டு இந்திய அணிக்கு முக்கிய தொடர்கள் இருப்பதால் நான் காயமடைய விரும்பவில்லை.

கடந்த ஆண்டுதான் இது நிகழ்ந்தது. ஃபீல்டிங்கில் என்னுடைய டைவ் அடிக்கும் உத்தி காணாமல் போயுள்ளது. ஆனால் மீண்டும் அதனைக் கண்டுபிடித்துக் கொள்வேன் என்று நம்பிக்கை இருக்கிறது." என்றார் யுவ்ராஜ்.

யுவ்ராஜ் தற்போது மணிக்கட்டு காயத்தினால் அவதியுறுகிறார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணித் தலைமைப் பொறுப்பை இழந்த யுவ்ராஜ் சிங், இந்தக் காயங்களால் தான் வெறுப்படைந்து பொறுமை இழந்ததாகவும், இதனாலேயே ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தனது ஃபார்மை மீட்டெடுக்க களமிறங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
Continue Reading

2009---- 2010 தமிழ் படங்கள் ஒரு பார்வை

| 0 comments

2009 இறுதியில் விஜயின் வேட்டைக்காரன் மற்றும் நகுலின் கந்தகோட்டை ஆகிய படங்கள் திரைக்கு வந்தன இதில் நகுலின் இதுவரை வந்தபடங்கள் சன் பிக்சர்ஸ் விளம்பரத்தில் ஓடியபடங்கள் இம்முறை நகுல் தனது படத்தை எந்த விளம்பரமும் இல்லாமல் வேட்டைக்கரனுக்கு போட்டியாக வெளிவந்தது இதில் விஜயின் வேட்டைக்காரன் சன் பிக்சர்ஸ் இன் அதிரடி விளம்பரத்துக்கு மத்தியில் வெளிவந்தது ஆயினும் நகுலின் கந்தகோட்டை {Average} படமாகியது விஜயின் வேட்டைக்காரனும் {Average} விஜயின் படத்துடன் வெளியிட முன்வந்த இப்படதின் தயாரிப்பாளரை பாராட்டி ஆகவேண்டும் சரி இந்த கதைய விடுவம் நாம அடுத்தகட்டமாக வெளிவந்த படங்களை பார்பம் தொடர்ந்து விஜயை பற்றி பேசினா விஜய் ரசிகர்களுக்கு கோபம் வருது.


2010 வெளிவந்த படங்கள் தமிழ் படம் , கோவா , குட்டி , அசல் பொரிய போட்டிக்கு மத்தியில் வெளிவந்த படங்கள் கோவா வெங்கட் பிரவுவின் அதிரடி வெற்றிக்கு பிறகு வந்தபடம் அடுத்தது குட்டி தனுஷ் அடுத்தது அசல் அஜிதின் ஏகன் தோல்விக்கு பிறகு பொரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம் இப்படம் அஜித் ரசிகர்களுக்குமட்டும் விருந்து தமிழ் படம் தமிழ் படமே தான் இனி இந்தபடங்கள் எப்பிடினு பார்ப்பம் கோவா {Hit} தமிழ்படம் {Hit} அசல் {Above Average} குட்டி {Average}

விஜயின் வேட்டைக்கரனுக்கு பிறகு இப்ப வரவிருக்கும் படம் சுறவாம் இந்தப்படத்தில தலபோல கோட் சூட் போட்டு இருக்காரு விஜய் சரி விஜய்க்கு நல்ல இருக்கு படம் வெற்றியான சரி
Continue Reading

கவுண்டமணி நலமுடன் இருக்கிறார்! மருத்துவமனை தகவல்!!

| 0 comments

நடிகர் கவுண்டமணி இன்று காலை மாரடைப்பால் மரணம் அடைந்ததாக வதந்தி பரவியது. ஆனால் அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. நகைச்சுவை நடிகர்களில் தனக்கென தனி பாதையை உருவாக்கி தமிழ் ரசிகர்களை சிரிக்க வைத்தவர் நடிகர் கவுண்டமணி. இவரும், கா‌மெடி நடிகர் செந்திலும் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளனர். 800க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கும் கவுண்டமணி உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். 16 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அவர் கடைசியாக ஜக்குபாய் படத்தில் நடித்திருந்தார்.

உடல்நிலை சரியில்லாததால் சினிமாவில் நடிக்க விருப்பம் இல்லாமல் இருந்த கவுண்டமணிக்கு கடந்த இரு தினங்களுக்கு முன் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டதாகவும், அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டது. ஆனால் அவரது குடும்பத்தினர் அதனை மறுத்தனர். இந்நிலையில் இன்று காலை கவுண்டமணிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்து விட்டதாக செய்திகள் பரவின. இதுபற்றி மருத்துவமனை வட்டாரத்தில் விசாரித்தபோது, கவுண்டமணி நலமுடன் இருக்கிறார் என்று கூறப்பட்டது.

தமிழ் திரையுலகின் ஜாம்பவானாக திகழ்ந்த கவுண்டமணியின் காமெடிக்காகவே ஓடிய படங்களில் கரகாட்டக்காரன், சின்னக்கவுண்டர், உள்ளத்தை அள்ளித் தா, மேட்டுக்குடி, மன்னன், இந்தியன், சூரியன் உள்ளிட்ட படங்கள் குறிப்பிடத்தக்கவை.
Continue Reading

சூப்பர் ஸ்டார் இளமை … அசத்தலான "எந்திரன்" உயர்தர படங்கள்

| 0 comments

நவீன தொழில் நுட்பத்தை தனது படங்களில் புகுத்தி தமிழ் சினிமாவை அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் ஷங்கர் என்றால் மிகையாகாது.

கிராபிக்ஸை படங்களில் சரியாக பயன்படுத்துவது முதல் காமிரா ஆங்கிள்கள் வரை இவரது பிரம்மாண்டத்துக்கு இந்தியா சினிமாவில் ஈடு இணையில்லை.

கடின உழைப்பு மற்றும் இடையறாத முயற்சி மூலம் ஷங்கர் இன்று இந்த நிலையை அடைந்திருக்கிறார்.

அவரின் இயக்கத்தில் உருவாகி வரும் எந்திரன் பட பிடிப்புகள 90ம% ஷூட்டிங் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் எந்திரன் பட அசத்தலான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

சூப்பர் ஸ்டார் எத்துனை இளமையாக இருக்கிறார் பாருங்கள்… இவருக்குள் இருக்கும் இளமையை வெளியே கொண்டுவந்து நமக்கு விருந்து வைத்தமைக்கு ஷங்கருக்கு?

Continue Reading

அமிதாப்புக்கு 2 வாழ்நாள் சாதனையாளர் விருது

Wednesday, March 17, 2010 | 0 comments

ஹாங்காங் ஆசிய பட விழாவில் நடிகர் அமிதாப் பச்சனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளது. ஹாங்காங்கில் வருகிற 22ம்தேதி ஆசிய திரைப்பட விழா நடக்கிறது. ஆசியாவில் தயாரிக்கப்பட்ட சிறந்த படங்கள், சிறந்த நடிகர்கள், நடிகைகள் மற்றும் இயக்குநர்களுக்கு இந்த விழாவில் விருது வழங்கப்படுகிறது.


இந்த விழாவில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு வாழ்நாள் சாதனைக்கான விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறார். இதே போன்ற வாழ்நாள் சாதனையாளர் விருது மஸ்கட் சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழாவிலும் அமிதாப்புக்கு வழங்கப்படுகிறது. இந்த தகவலை அமிதாப் தனது பிளாக்கில் வெளியிட்டுள்ளார்.


எத்தனையோ விருதுகள் பெற்றாலும், இதுபோன்ற சாதனையாளர் விருது பெருவது மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்றும் அமிதாப் கூறியுள்ளார்.
Continue Reading

இங்கே ஒரு நித்யானந்தர் பார்த்திபனின் நக்கல்! அருண் விஜய்

| 0 comments

அருண் விஜய் நடித்த மலை மலை படத்திற்கு 100 வது நாள் விழா கொண்டாடினார்கள். ஏவிஎம் சரவணன், கேஆர்ஜி, எஸ்.பி.முத்துராமன், பார்த்திபன், கார்த்திக் என்று மேடையில் அளவான விருந்தினர்கள்.
முன்னதாக பேசிய எஸ்பிஎம், படத்தில் நடித்த ஒவ்வொருவரையும் மலை மலை என்று வர்ணித்துக் கொண்டே வந்தார். அதற்காக அவர் வேதிகாவையும், கஸ்தூரியையும் மலை மலை என்று குறிப்பிட்டது அநியாயம்!

தனது பேச்சில் வசமாக இதை பிடித்துக் கொண்டார் பார்த்திபன். வேதிகாவையும் கஸ்தூரியையும் மலை மலைன்னு வர்ணிக்கறதுக்காகவே முத்துராமன் சார் எல்லாரையும் மலை மலைன்னு சொல்லிட்டு வந்தாரு போலிருக்கு என்று சொல்ல, சற்றே நெளிந்தார் எஸ்பிஎம். 50 காட்சிகள் என்று போஸ்டர் ஒட்டுற அளவுக்குதான் படங்கள் இப்போ ஓடிட்டு இருக்கு. இந்த நேரத்தில 100 நாள் விழா கொண்டாடுறது நிஜமாகவே சந்தோஷமான விஷயம் என்று பாராட்டிய பார்த்திபன், அப்படியே சந்தடி சாக்கில் நித்தியானந்தரையும் ஒரு நெருக்கு நெருக்கினார்.

இந்த மேடையில நித்யானந்தர் மாதிரி ஜம்முன்னு உட்கார்ந்திருக்காரு விஜயகுமார். அதாவது நித்யமும் ஆனந்தமா இருக்கிறவரு அவரு. எவ்வளவு டென்ஷனா இருந்தாலும் முகத்திலே சிரிப்பு மாறாம இருப்பாரு. நம்மள கட்டி அணைச்சு அந்த சிரிப்பை நமக்கும் பாஸ் பண்ணுவாரு. நம்மளை கட்டி அணைக்கிறாரேன்னு நாம நினைப்போம். ஆனா பின்னாடி நாலு இளம் பெண்கள் வந்துகிட்டு இருப்பாங்க. அவங்களை அடுத்ததாக அணைக்கறதுக்காகவே நம்பளை அணைப்பாரு என்று கூறி அந்த ஏரியாவையே கலகலப்பாக்கிவிட்டு போனார்.
எங்க அம்மா முன்னாடி இப்படி ஒரு விழா எடுக்கணும்ங்கறது என்னோட கனவு. அதை நிறைவேற்றிட்டேன். அது போதும் என்று மனமுருகினார் அருண் விஜய்.
Continue Reading

ஏப்ரல் 8ம்தேதி திருப்பதியில் ரம்பா திருமணம்!

| 0 comments

நடிகை ரம்பாவுக்கு ஏப்ரல் மாதம் 8ம்தேதி திருப்பதியில் திருமணம் நடக்கிறது. அதனைத்தொடர்ந்து 11ம்தேதி சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவிருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். உள்ளத்தை அள்ளித்தா படம் மூலம் தமிழ் ரசிகர்களின் உள்ளத்தை கிள்ளிய நடிகை ரம்பாவுக்கும் கனடாவை சேர்ந்த மேஜிக்உட் நிறுவனத்தின் உரிமையாளர் இந்திரனுக்கும் ஏற்கனவே திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. 37 வயதாகும் இந்திரன் - ரம்பா திருமண தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. இவர்களது திருமணம் ஏப்ரல் 8ம்தேதி திருப்பதியில் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து 11ம்தேதி சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக ரம்பா குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

ரம்பாவை திருமணம் செய்யப்போகும் இந்திரன் ஆண்டுக்கு சுமார் ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் வர்த்தகம் புரியும் தொழிலதிபர் ஆவார். இந்திரனின் மேஜிக்உட் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக நியமிக்கப்பட்ட ரம்பாவை, இந்திரனுக்கு பிடித்து விட்டதால் ரம்பா குடும்பத்தாரிடம் தனது விருப்பத்தை தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து இருவீட்டாரும் சேர்ந்து திருமண பேச்சு நடத்தி இந்த திருமணத்தை நடத்தி வைக்கிறார்கள். திருமணத்துக்கு முன்னே ரம்பாவுக்கு ரூ.1 கோடியே 25 லட்சம் மதிப்பிலான சொகுசு காரை இந்திரன் பரிசளித்தது நினைவிருக்கலாம்.
Continue Reading

படத்திலிருந்து சூர்யா விலகல்

| 1comments

மோகன்லால், அமிதாப்பச்சன் இணைந்து நடிக்கும் கந்தகார் விரைவில் தொடங்குகிறது. படப்பிடிப்புக்கான நாள் நெருங்கும் நேரத்தில் திடீர் சிக்கல். கந்தகா‌ரில் கமாண்டோவாக நடிக்க சம்மதம் தெ‌ரிவித்திருந்த சூர்யா கடைசி நிமிடத்தில் கைவி‌ரித்துள்ளார். கந்தகாருக்கு கால்ஷீட் இல்லையாம்.

சூர்யா ராம்கோபால் வர்மாவின் இயக்கத்தில் நடிக்கும் ரக்தச‌ரித்ரா படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. தமிழ், தெலுங்கு, இந்தி என மும்மொழிகளில் இப்படம் தயாராகிறது. சூர்யா நடிக்கும் முதல் நேரடி தெலுங்கு, இந்தி திரைப்படம் இது. சூர்யாவின் சின்சியா‌ரிட்டி 200 மடங்காக எகிறியிருக்கிறது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து முருகதாஸின் படத்தில் சூர்யா நடிக்கிறார். ஏறக்குறைய இந்த வருடத்தின் கால்ஷீட் டை‌ரி ஹவுஸ்ஃபுல். கந்தகாருக்கு கிள்ளிக் கொடுக்கக்கூட இல்லையாம் கால்ஷீட்.

தனது இந்த நெருக்கடியை மோகன்லாலுக்கு வி‌ரிவாக எடுத்துக் கூறியிருக்கிறார் சூர்யா. காரணம் கந்தகாரை இயக்குவது மேஜர் ரவி என்றாலும், தயா‌ரிப்பது ஹீரோவாக நடிக்கும் மோகன்லால்.

சூர்யாவுக்குப் பதில் துடிப்பான இளம் நடிகர் ஒருவரை‌த் தேடி வருகிறார் லால்.
Continue Reading

பையா ஏப்ரல் 2ஆம் தேதி திரைக்கு

| 0 comments

ஆயிரத்தில் ஒருவன் தெலுங்கில் ஹிட். இந்த வெற்றி கார்த்தியை வைத்து படம் எடுத்தவர்களையும், எடுக்கப் போகிறவர்களையும் ரொம்பவே யோசிக்க வைத்திருக்கிறது. கார்த்தியின் தமிழ்ப் படத்தை தெலுங்கில் டப் செய்தால்... ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.

இந்த இரண்டு மாங்காயை முதலில் அடிக்கப் போகிறவர் லிங்குசாமி. தமிழில் மட்டுமே பையாவை வெளியிட நினைத்திருந்தவர் ஆயிரத்தில் ஒருவனின் தெலுங்கு வெற்றிக்குப் பிறகு தெலுங்கிலும் பையாவை வெளியிட முடிவு செய்துள்ளார்.

டப்பிங் பணிகள் முடிந்து ஆவாரா என்று படத்துக்கு பெயரும் தேர்வு செய்துள்ளனர். நேரடி தெலுங்குப் படம் போல் தெ‌ரிவதற்காக சில காட்சிகளையும் புதிதாக தெலுங்கு பதிப்பில் ஷூட் செய்து சேர்த்திருக்கிறார்கள்.

ஆவாராவின் பிரஸ்மீட் சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்தது. கார்த்தி உள்ளிட்ட பையா படக்குழுவினர் இதில் கலந்து கொண்டனர்.

பையா ஏப்ரல் 2ஆம் தேதி திரைக்கு வருகிறது.
Continue Reading
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Suren Pages - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger