கடந்த சில மாதங்களாக காயங்களால் அவதியுறுவதால் தனது டைவ் அடித்து ஃபீல்டிங் செய்யும் திறமை காணாமல் போய்விட்டது என்று இந்திய அதிரடி இடது கை பேட்ஸ்மென் யுவ்ராஜ் சிங் தெரிவித்துள்ளார்."கடந்த 4 மாதங்களில் இந்த காயங்கள் எனக்கு ஏற்பட்டது என்பது துரதிர்ஷ்டவசமானது, இந்த ஆண்டு இந்திய அணிக்கு முக்கிய தொடர்கள் இருப்பதால் நான் காயமடைய விரும்பவில்லை.கடந்த ஆண்டுதான் இது நிகழ்ந்தது. ஃபீல்டிங்கில் என்னுடைய டைவ் அடிக்கும் உத்தி காணாமல் போயுள்ளது. ஆனால் மீண்டும் அதனைக் கண்டுபிடித்துக் கொள்வேன் என்று நம்பிக்கை இருக்கிறது." என்றார் யுவ்ராஜ்.
யுவ்ராஜ் தற்போது மணிக்கட்டு காயத்தினால் அவதியுறுகிறார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணித் தலைமைப் பொறுப்பை இழந்த யுவ்ராஜ் சிங், இந்தக் காயங்களால் தான் வெறுப்படைந்து பொறுமை இழந்ததாகவும், இதனாலேயே ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தனது ஃபார்மை மீட்டெடுக்க களமிறங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment