உலக அழிவு பற்றிய 2012 ஆங்கில படம் சக்கைபோடு போட்டது. அதே வரிசையில் வந்துள்ள 'லெஜியன்' என்ற ஹாலிவுட் படம் தமிழில் “கருட யுத்தம்” என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிடப்படுகிறது.கிராபிக்ஸ், ஆக்ஷன், திரில்லர் காட்சிகளை நவீன தொழில் நுட்பத்தில் உருவாக்கி உள்ளனர். பூமியில் அன்பு இல்லாத மனித தன்மையற்ற செயல்கள் பெருகுவதை கண்டு கோபமடைகிறார் கடவுள். மனித இனத்தையே அழிக்க பெரும் படையை அனுப்புகிறார்.
கடவுளாலே வரும் கடும் ஆபத்தை தடுக்க முடியாமல் மனித குலம் குலை நடுங்குகிறது. உலகையும் மனிதனையும் காக்க புறப்படுகிறான் ஒரு வீரன். உலகில் பிறக்காத ஒரு குழந்தை நம்பிக்கை ஒளியாகிறது. அக்குழந்தையை காப்பாற்ற அவன் படும்பாடு சாகசங்கள் இப்படி போகிறது கதை.
கதாநாயகனாக பால் பெட்டானி நடித்துள்ளார். ஸ்காட் ஸ்டீவர்ட் இயக்கி உள்ளார். சோனி பிக்சர்ஸ் வெளியிடுகிறது.
0 comments:
Post a Comment