Latest Games :
Showing posts with label ThillaLangadi. Show all posts
Showing posts with label ThillaLangadi. Show all posts

தில்லாலங்கடி முன்னோட்டம்

Tuesday, March 16, 2010 | 0 comments

அப்பா எடிட்டர் ஏ.மோகன், அண்ணன் எம்.ராஜா இயக்கத்தில் தம்பி ஜெயம் ரவி நடிக்கும் படம் தில்லாலங்கடி. கிக் எனும் பெயரில் தெலுங்கில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற படத்தின் தமிழ் ரீ-மேக்காக தயாராகும் இப்படத்தில் ரவியின் ஜோடி தமன்னா. இந்த ஜோடி தவிர ஷாம், பிரபு, வடிவேலு, சந்தானம், மன்சூர் அலிகான், லிவிங்ஸ்டன், தியாகு, சத்யன், மயில்சாமி, ஜான்விஜய், ஜெயப்பிரகாஷ், லொல்லுசபா மனோகர், பாலாஜி, தீவு, சுஹாசினி, நளினி, லட்சுமி, லதா ராவ், சந்திரா லஷ்மன் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்கும் இப்படத்தின் முதல் நாள் சூட்டிங்கை டைரக்டர் ஷங்கர் தொடங்கி வைத்தார்.

தில்லாலங்கடியின் சூட்டிங் மலேசியாவிலும் நடத்தப்பட்டுள்ளது. மலேசிய சூட்டிங் பற்றி நாயகன் ஜெயம் ரவி கூறுகையில், எங்கள் ஜெயம் கம்பெனி தயாரித்த எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமிக்கு பிறகு மலேசியாவில் படப்பிடிப்பு நடத்திய படம் தில்லாலங்கடி. சேஸிங்கிற்காக புது கார்கள் வாங்கி, அவற்றை சுக்குநூறாக உடைத்து எடுக்கப்பட்ட பரபரப்பான காட்சியை 3 கேமராக்கள் படமாக்கின. ஹெலிகாப்டர் மூலமாகவும் படமாக்கினோம். ஹாலிவுட் படங்களுக்கு நிகராக இந்த சேஸிங் காட்சி இருக்கும். உலகிலுள்ள உயரமான கட்டிடங்களில் ஒன்றான ட்வின் டவர் வாசலிலும், மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் செல்லும் ரயிலிலும் முக்கிய காட்சிகள் படமானது. கதைப்படி நாயகி தமன்னா குடும்பம் மலேசியாவில் வசிக்கிறது. அங்கு நடக்கும் சம்பவங்கள் கோலாலம்பூரில் படமானது. நான், வடிவேலு, சந்தானம் நடித்த காமெடி காட்சிகள் ரசிகர்களை கவரும். மேலும் ராஜசேகரின் ஒளிப்பதிவும், யுவன்சங்கர்ராஜாவின் இசையும் படத்துக்கு பலம். நானும், இயக்குனர் ஜெயம் ராஜாவும் பணியாற்றிய பல படங்கள் வெற்றியடைந்துள்ளது. அதுபோல், தில்லாலங்கடியும் வெற்றி பெறும். எனது தந்தை கதாபாத்திரத்தில் பிரபு நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ஷாம் நடிக்கிறார், என்றார்.
Continue Reading
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Suren Pages - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger