
இவர்களின் பிரிவுக்கு என்ன காரணம் என்பதை அலசுவது இப்போதைக்கு தேவையில்லாத ஒன்று. லேட்டஸ்ட் நியூசுக்கு வருவோம். பரஸ்பர விவாகரத்துக்கு செல்வா கொடுத்த விலை இரண்டரை கோடியாம். அதுவும் தீர்ப்பு கைக்கு வருகிற நாளில் செட்டில்மென்ட் செய்ய வேண்டும் என்று உத்தரவு.
சமீபகாலமாக பணப்பிரச்சனையில் சிக்கிக் கொண்டிருக்கும் செல்வா, இந்த இரண்டரை கோடியை எப்படி புரட்டினார்? ஒரு தெலுங்கு படத்தை இயக்கித்தர ஒப்புக் கொண்டாராம். முதல் காப்பி அடிப்படையில் ஒப்புக் கொள்ளப்பட்ட இப்படத்தின் முதல் தவணை மூன்று கோடி. (மொத்தம் பத்து கோடி) இதில்தான் இரண்டரையை சோனியாவுக்கு வழங்கினாராம்.
இப்படம் தமிழ், தெலுங்கு இருமொழியில் தயாராக போகிறது. டி.ராமாநாயுடுவின் பேரனும், வெங்கடேஷின் அக்கா மகனுமான ராணா என்ற இளைஞர்தான் இப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறாராம்.
போக்கிரி ரமேஷ் தயாரிக்கும் படத்தை முடித்துவிட்டு இந்த படத்தை துவங்குவாரா? அல்லது அதை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு இதற்கு வருவாரா? செல்வாவுக்கே வெளிச்சம்!
0 comments:
Post a Comment