Latest Games :
Showing posts with label Vijay (Thalapathi). Show all posts
Showing posts with label Vijay (Thalapathi). Show all posts

விஜய்யின் பகலவன்

Monday, March 15, 2010 | 0 comments

மே மாதம் நாம் தமிழர் இயக்கம் அரசியல் கட்சியாக ப‌ரிமாணம் கொள்கிறது. அரசியல் பிரவேசத்தையொட்டி சீமான் பரபரப்பாக இருப்பார் என்று பார்த்தால், ‌ரிலாக்சாக அடுத்தப் படத்துக்கான கதை விவாதத்தில் இருந்தார். படத்தின் ஹீரோ விஜய்.

தாணு தயா‌ரிப்பில் சீமான் இயக்கும் பகலவன் படத்தில் விஜய் நடிப்பது உறுதியாகிவிட்டது. படத்தின் ஒன் லைன் சொல்லி விஜய்யின் சம்மதத்தையும் வாங்கிவிட்டார் சீமான். ஜெயம் ராஜா, சித்திக் இயக்கும் படங்களுக்குப் பிறகு பகலவன் படப்பிடிப்பில கலந்து கொள்கிறார் விஜய்.

ஏப்ரல், மே மாதங்களில் அரசியல் பணிகள் இருக்கும் என்பதால் இப்போது பகலவன் ஸ்கி‌ரிப்டை முடிக்கும் பணியில் சீமான் ஈடுபட்டிருக்கிறார்.

தமி‌ழீழ தேசிய‌த் தலைவர் பிரபாகரனிடம் சீமான் கூறிய இரண்டு கதைகளில் ஒன்று இந்த பகலவன் என்பது குறிப்பிடத்தக்கது.
Continue Reading

ராமேஸ்வரத்தில் விஜய்யி்ன் சுறா சூட்டிங்

Friday, February 26, 2010 | 1comments

சுறா படத்தின் சூட்டிங் ராமேஸ்வரத்தில் நடந்து வருகிறது.
வேட்டைக்காரன் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்கும் சுறா படத்தின் சூட்டிங் ராமேஸ்வரத்தில் நடந்து வருகிறது. எஸ்.பி.ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் நடிகர் விஜய் மீனவராக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை தமன்னா ஒப்பந்தமாகியுள்ளார்.

சுறா மீனை குறிக்கும் இப்படத்தின் சூட்டிங் தற்போது ராமேஸ்வரத்தில் நடந்து வருகிறது. சூட்டிங்கில் பங்கேற்பதற்காக டான்ஸ் மாஸ்டர் ராஜூசுந்தரம் மற்றும் 300க்கும் மேற்பட்ட நடனக்குழுவினரும் ராமேஸ்வரத்திற்கு வந்துள்ளனர்.

தொடர்ந்து 4 நாட்கள் அங்கு சூட்டிங்கை நடத்த திட்டமிட்டிருக்கும் சுறா பட குழுவினர், தமிழ்சினிமாவின் லேட்டஸ்ட் ட்ரெண்ட்படி ‌வெளிநாட்டில் படக்காட்சிகளை எடுக்கவுள்ளனர்.
Continue Reading
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Suren Pages - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger