Latest Games :
Home » » வாய்ப்பை நழுவ விட்ட இந்தியா! தோல்விக்கு என்ன காரணம்?

வாய்ப்பை நழுவ விட்ட இந்தியா! தோல்விக்கு என்ன காரணம்?

Saturday, March 1, 2014 | 0 comments

ஆசிய கிண்ணப் போட்டியில் இலங்கை அணியிடம் இந்தியா 2 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இதற்கு இந்திய அணியின் மோசமான பீல்டிங்கே காரணம் என தெரிவிக்கப்படுகிறது, 5 முறை கேட்சை தவறவிட்டுள்ளனர்.
* இலங்கை தொடக்க ஆட்டக்காரர் குசல் பெரேரா 7 ஓட்டங்களில் ஆடிக் கொண்டிருந்த போது கொடுத்த நல்ல கேட்ச் வாய்ப்பை, ரஹானே, ஷிகர் தவான் இருவரும் பிடிக்க முயற்சித்து முட்டி மோதி கோட்டை விட்டனர். ஒருவர் மட்டுமே ஓடி வந்திருந்தால் கேட்ச் செய்திருக்கலாம்.
*திரிமன்னே 5 ஓட்டங்கள் எடுத்திருந்த போது, வலுவாக அடித்த பந்தை அந்தரத்தில் பாய்ந்து ஜடேஜா பிடிக்க முயற்சித்தார், அது தவறியது.
* 38 ஓட்டத்தில் இருந்த போது குசல் பெரேராவுக்கு, மறுபடியும் ஜடேஜாவின் உருவத்தில் கருணை கிடைத்தது. ஜடேஜாவின் கையில் பந்து சரியாக விழுந்த போதிலும், கண்ணிமைக்கும் நேரத்தில் நழுவிப் போனது.
* சங்கக்கரா வழங்கிய வாய்ப்பை வீணடித்ததன் விளைவு தான் இந்தியாவுக்கு பேரிடியாக அமைந்தது. அவர் 30 ஓட்டங்களில் ஆடிக் கொண்டிருந்த போது, ஜடேஜாவின் பந்து வீச்சில் ஸ்டம்பிங் ஆகியிருக்க வேண்டியது.
அவர் கிரீசை விட்டு வெளியே நின்ற போது பந்தை சேகரித்த விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் உடனடியாக ஸ்டம்பை தாக்க முயற்சித்த போது கை ஸ்டம்பில்படவில்லை. பிறகு 2வது முயற்சியில் அடிப்பதற்குள் சங்கக்கரா கிரீசுக்குள் வந்து தப்பி விட்டார்.
* இலங்கை அணி வெற்றியின் விளிம்பில் இருந்த போது கூட கடைசி ஓவரின் முதல் பந்தில் திசரா பெரேரா வழங்கிய எளிதான கேட்ச்சை மிட்–ஆப் திசையில் நின்ற ஷிகர் தவான் வீணடித்தார்.
Share this article :

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Suren Pages - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger