Latest Games :
Showing posts with label Selvarahavan. Show all posts
Showing posts with label Selvarahavan. Show all posts

சோனியாவுக்கு இரண்டரை கோடி -செல்வராகவனின் செட்டில்மென்ட்?

Monday, March 15, 2010 | 0 comments

இடிச்சபுளியாக இருந்தாலும் அவர்களை மடக்கிப் போடுவதில் நடிகைகள் சமர்த்தர்கள்! இடிச்சப்புளிகளுக்கே இப்படி என்றால் இன்டலிஜென்ட்டுகளுக்கு? அப்படிதான் சோனியாவிடம் சிக்கினார் செல்வராகவன். எதிர்காலத்தில் கோடிக்கணக்கில் சம்பளம் பெறுவார் என்று தெரிந்தேதான் காதல் வளர்த்தாராம் சோனியா. கல்யாணத்தில் முடிந்த இந்த காதல் அவ்வளவு சீக்கிரம் அலுத்துப் போகும் என்பதை யாராலும் யூகித்திருக்க முடியாது.

இவர்களின் பிரிவுக்கு என்ன காரணம் என்பதை அலசுவது இப்போதைக்கு தேவையில்லாத ஒன்று. லேட்டஸ்ட் நியூசுக்கு வருவோம். பரஸ்பர விவாகரத்துக்கு செல்வா கொடுத்த விலை இரண்டரை கோடியாம். அதுவும் தீர்ப்பு கைக்கு வருகிற நாளில் செட்டில்மென்ட் செய்ய வேண்டும் என்று உத்தரவு.

சமீபகாலமாக பணப்பிரச்சனையில் சிக்கிக் கொண்டிருக்கும் செல்வா, இந்த இரண்டரை கோடியை எப்படி புரட்டினார்? ஒரு தெலுங்கு படத்தை இயக்கித்தர ஒப்புக் கொண்டாராம். முதல் காப்பி அடிப்படையில் ஒப்புக் கொள்ளப்பட்ட இப்படத்தின் முதல் தவணை மூன்று கோடி. (மொத்தம் பத்து கோடி) இதில்தான் இரண்டரையை சோனியாவுக்கு வழங்கினாராம்.

இப்படம் தமிழ், தெலுங்கு இருமொழியில் தயாராக போகிறது. டி.ராமாநாயுடுவின் பேரனும், வெங்கடேஷின் அக்கா மகனுமான ராணா என்ற இளைஞர்தான் இப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறாராம்.

போக்கிரி ரமேஷ் தயாரிக்கும் படத்தை முடித்துவிட்டு இந்த படத்தை துவங்குவாரா? அல்லது அதை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு இதற்கு வருவாரா? செல்வாவுக்கே வெளிச்சம்!
Continue Reading
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Suren Pages - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger