
இந்த இரண்டு மாங்காயை முதலில் அடிக்கப் போகிறவர் லிங்குசாமி. தமிழில் மட்டுமே பையாவை வெளியிட நினைத்திருந்தவர் ஆயிரத்தில் ஒருவனின் தெலுங்கு வெற்றிக்குப் பிறகு தெலுங்கிலும் பையாவை வெளியிட முடிவு செய்துள்ளார்.
டப்பிங் பணிகள் முடிந்து ஆவாரா என்று படத்துக்கு பெயரும் தேர்வு செய்துள்ளனர். நேரடி தெலுங்குப் படம் போல் தெரிவதற்காக சில காட்சிகளையும் புதிதாக தெலுங்கு பதிப்பில் ஷூட் செய்து சேர்த்திருக்கிறார்கள்.
ஆவாராவின் பிரஸ்மீட் சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்தது. கார்த்தி உள்ளிட்ட பையா படக்குழுவினர் இதில் கலந்து கொண்டனர்.
பையா ஏப்ரல் 2ஆம் தேதி திரைக்கு வருகிறது.
0 comments:
Post a Comment