
உடல்நிலை பாதிப்பால் சினிமாவை விட்டு விலகியிருந்த கவுண்டமணி சமீபத்தில் ஜக்குபாய் படத்தில் நடித்திருந்தார். இதற்கிடையில் அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் சொந்த ஊருக்கே சென்று விட்டதாகவும், அங்கு ஓய்வு எடுத்து வருவதாகவும் செய்தி வெளியாகியது. ஆனால் அவர் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனது வீட்டில்தான் வசித்து வந்தார்.
இந்நிலையில் இன்று காலை கவுண்டமணி அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றுள்ளார். கழுத்து பட்டை தேர்வு தொடர்பான சிகிச்சைக்காக கவுண்டமணி அங்கு சென்றிருக்கிறார். ஆனால் கவுண்டமணிக்கு ஹார்ட் அட்டாக் என்றும், அவருக்கு சீரியஸாக இருப்பதாகவும் செய்தி வெளியானது. இதனால் கோலிவுட் முழுதும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி கவுண்டமணியின் மனைவி கூறுகையில், எனது கணவர் நலமுடன் இருக்கிறார். அவர் இப்போது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். கழுத்து பட்டை தேய்வு காரணமாக அவ்வப்போது மருத்துவமனை சென்று சிகிச்சை மேற்கொள்வார். இன்றும் வழக்கமான செக்-அப்பிற்காகத்தான் சென்றோம், என்றார்.
கவுண்டமணியின் நிஜ பெயர் மணி. சினிமாவுக்கு வந்த நேரத்தில் அவரிடம் யார் பேச்சு கொடுத்தாலும் அதற்கு ஒரு கவுண்டர் வைத்தும், கவுண்டவுன் வைத்தும் நையாண்டியுடன் பதில் சொல்லியிருக்கிறார். அதனால் கவுண்டவுன் மணி என்று எல்லோரும் அழைத்துள்ளனர். அது காலப்போக்கில் மருவி கவுண்டமணி என்றாகி விட்டது என்பது கூடுதல் தகவல்
நீடூழி வாழ்க
ReplyDelete