ஹாங்காங் ஆசிய பட விழாவில் நடிகர் அமிதாப் பச்சனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளது. ஹாங்காங்கில் வருகிற 22ம்தேதி ஆசிய திரைப்பட விழா நடக்கிறது. ஆசியாவில் தயாரிக்கப்பட்ட சிறந்த படங்கள், சிறந்த நடிகர்கள், நடிகைகள் மற்றும் இயக்குநர்களுக்கு இந்த விழாவில் விருது வழங்கப்படுகிறது.இந்த விழாவில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு வாழ்நாள் சாதனைக்கான விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறார். இதே போன்ற வாழ்நாள் சாதனையாளர் விருது மஸ்கட் சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழாவிலும் அமிதாப்புக்கு வழங்கப்படுகிறது. இந்த தகவலை அமிதாப் தனது பிளாக்கில் வெளியிட்டுள்ளார்.
எத்தனையோ விருதுகள் பெற்றாலும், இதுபோன்ற சாதனையாளர் விருது பெருவது மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்றும் அமிதாப் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment