
இப்போது நித்தியானந்தர் குறித்து வெளியாகியிருக்கும் செய்தி கொஞ்சம் சுவாரஸ்யமானது. புகழின் உச்சியில் இருந்த நித்தியானந்தர், சர்ச்சைக்குரிய வீடியோவால் ஒரே நாளில் பல பக்தர்களின் மனதில் இருந்து ஓரம் கட்டப்பட்டது என்னவோ நிஜம்தான்.
சரிந்த புகழை தூக்கி நிறுத்தும் வகையில் சினிமாப்படம் ஒன்றை எடுக்க நித்தியானந்தர் ஆசிரமம் முயன்று வருகிறதாம். இதற்காக பெரிய அளவில் பணம் ஒதுக்க திட்டமிட்டிருக்கும் ஆசிரமம், இப்போதும் தங்களுடன் தொடர்பில் இருக்கும் சினிமா பிரபலங்களிடம் இந்த விஷயத்தை சொல்லி சரியான இயக்குனரை தேடிக் கொண்டிருக்கலாம்.
நித்தியானந்தரின் புகழை பறைசாற்றும் வகையில் உருவாகவிருக்கும் இப்படத்தில், நிஜமாகவே நித்தியானந்தர் இடம்பெறும் பிரசங்க, அருளாசி காட்சிகளும் இடம்பெறவிருக்கின்றனவாம்.
அதேநேரம் நித்யானந்தர் விவகாரத்தையே சினிமாவாக்கவும் இன்னொரு தரப்பு முயன்று வருகிறது. இதற்காக இந்த விவகாரத்தில் நடந்தது என்ன? என்று ஆராய்ச்சி வேறு நடந்து கொண்டிருக்கிறதாம்.
இந்த இரண்டு சினிமாக்கள் பற்றிதான் கோடம்பாக்கத்தில் பரபர டாக் ஓடிக் கொண்டிருக்கிறது. 2 படங்களும் ஒரே நேரத்தில் வந்தால் எந்த படம் வெற்றி பெறும் என்பது பற்றியும் கோலிவுட்டில் பட்டிமன்றமே நடந்து வருகிறது!
0 comments:
Post a Comment