
முதல்வர் கலைஞர் இந்த வயசிலும் நைட் இரண்டரை மணி வரைக்கும் முழிச்சிட்டு இருந்து வேலை பார்க்கிறாரு. அதை கண்ணால பார்த்த பிறகும் நாம சோம்பேறியா இருக்கலாமா? அதனாலதான் என்றார். பேச்சுக்கு பேச்சு கலைஞர் புகழ் பாடும் பாலி, இன்னமும் அந்த பிரமிப்பிலிருந்து மீளவே இல்லை. தினமும் காலையில் ஒருமுறை, ஈவினிங் ஒருமுறை போன் பண்ணிடுவார். என்னென்ன செய்யப் போறோம், செய்தோம்ங்கறத இரண்டு நேரத்திலும் அவருக்கு விளக்குவேன். கதை வசனம் மட்டுமில்ல, ஒரு எடிட்டரும், இசையமைப்பாளரும் கூட அவருக்குள் இருக்காங்க என்கிற பாலி, ஒரு சம்பவத்தை சொல்லி புல்லரிக்கிறார்.
படத்தில் எங்கெல்லாம் வசனங்களை குறைக்கணும் என்று குறிப்பெழுதி வச்சிருந்தேன். திடீர்னு ஒரு நாள் கலைஞர் படத்தை பார்க்கணும்னு சொன்னார். போட்டு காட்டினோம். ஒவ்வொரு சீன்லேயும் இதிலேர்ந்து இது வரைக்கும் நீக்கிருங்க. இதுக்கு இந்தளவு நீளம் போதும் என்றெல்லாம் சொல்லிட்டாரு. ஆச்சர்யம் என்னன்னா நான் என்னென்ன பகுதிகளை குறைக்கணும்னு நினைச்சேனோ, அதைதான் கஞைரும் சொல்லியிருந்தார். தலைமை செயலகத்தை 105 முறை அவரு பார்வையிட்டதா செய்தி படிச்சேன். இந்த படத்தை 25 முறைக்கு மேலே பார்த்திட்டார். இந்த வயசிலேயும் அவருடைய ஈடுபாடு என்னை ஆச்சர்யப்படுத்துது என்றார் பாலி.
இன்னொரு ஆச்சர்யம். இரண்டு பாடல்களை படம் பிடிக்க சுவிட்சர்லாந்து போகிறார்களாம். உதய்கிரண் மீராஜாஸ்மின் ஜோடியாக நடித்தாலும், ஒரு பாடலுக்கு லாரன்சும் லட்சுமிராயும் ஒரு ஆட்டம் போட்டிருக்கிறார்கள். இதுவரைக்கும் பார்த்த கலைஞர் படம் மாதிரி இருக்காது. ஒரு போக்கிரி, சிவகாசி மாதிரி செம விறுவிறுப்பாக இருக்கும் என்ற பாலியின் கண்களில் வெற்றியின் வெளிச்சம் இப்பவே மின்ன ஆரம்பிக்கிறது.
0 comments:
Post a Comment