
இதில் உண்மை இருக்கிறதோ இல்லையோ. சிங்கமுத்துவின் சீண்டலை சீரியஸாக எடுத்துவிட்டார் போலிருக்கிறது வடிவேலு. அவரது மகனும் நடிக்க வருகிறார்.
தனது வாரிசை திரையில் இறக்க வேண்டும் என்பது வடிவேலின் நீண்ட நாள் கனா. அதற்கான நாள் பார்த்து வந்தவர் சைலண்டாக ரேனிகுண்டா இயக்குனர் பன்னீர் செல்வத்தை சந்தித்திருக்கிறார்.
இரண்டாவது ஹீரோ என்றாலும் பரவாயில்லை, என் மகனை உங்கப் படத்தில் நடிக்க வைங்க என்பதுதான் வடிவேலுவின் கோரிக்கை. தயாரிப்பாளர், பைனான்ஸ் என மற்ற விஷயங்களுக்கு நான் கியாரண்டி என உறுதியும் அளித்திருக்கிறார்.
தற்போது தெலுங்குப் படம் இயக்குவதில் பிஸியாக இருக்கும் பன்னீர் செல்வம் அதையடுத்து தமிழ்ப் படம் இயக்குகிறார். வடிவேலுவின் மகனுக்கும் இதில் ஒரு வேஷத்தை எதிர்பார்க்கலாமா?
0 comments:
Post a Comment