தான் நடிக்கும் படங்களின் சென்னை நகர உரிமையை வாங்கி வெளியிடும் வழக்கம் அநேகமாக முன்னணி நடிகர்கள் அனைவருக்கும் இருக்கிறது. விஜய் துவங்கி வைத்த இந்த பழக்கம் இப்போது மற்றவர்களை தொற்றிக் கொண்டிருக்கிறது. இதில் ஒரே ஒரு சவுகர்யம்.படம் ஓடாவிட்டாலும் தியேட்டருக்கு வாடகை செலுத்தி 100 நாள் போஸ்டர் ஒட்டிக் கொள்ளலாம். ஒருவேளை படம் சூப்பர் ஹிட் ஆகிவிட்டார் வருமானத்திற்கு வருமானம். ஆகையால் சம்பளம் பேசும்போதே 'சிட்டி நமக்கு' என்று கூறிவிடுவார்கள்.
இந்த பாணியை பின்பற்றி வந்த சிம்பு, இவர் நடித்து வெளிவரப் போகும் விண்ணை தாண்டி வருவாயா படத்தின் சென்னை நகர விநியோக உரிமையை விட்டுக் கொடுத்துவிட்டார். ஏன் என்பது குறித்து ஏகப்பட்ட சலசலப்புகள் இருந்தாலும், திரையரங்குகளில் வைக்கப்படும் கட் அவுட்டுகள், போஸ்டர்கள், அலங்காரங்கள் ஆகியவற்றுக்கு பெரும் தொகை ஒன்றை செலவிட முன் வந்திருக்கிறாராம். நம்ம படம் ரிலீஸ் ஆகும் தியேட்டர் திருவிழா மாதிரி இருக்கணும் என்பது அவரது ஆசை.
அவரது ரசிகர்கள் இப்பவே அதற்கான முன்னேற்பாடுகளில் இறங்கிவிட்டார்களாம். கனவுதேவதை த்ரிஷா ரசிகர் மன்றம் என்ன செய்யப் போகிறதோ?
0 comments:
Post a Comment