
தற்போது இவரது தயாரிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் து£ங்கா நகரம் உள்ளிட்ட சில படங்களின் ஸ்கிப்ட்டும் தயாநிதி அழகிரியின் டேபிளில் பக்காவாக இருக்கிறது. இந்நிலையில் தனது கொள்கையை அவர் கவுதம் மேனனிடமும் வலியுறுத்தியிருக்கிறாராம்.
அஜீத் நடிக்கும் படத்தை இதற்கு முன்பே ஒரு முறை இயக்கும் வாய்ப்பு கவுதமுக்கு அமைந்தது. அப்போதும் ஸ்கிரிப்ட் விஷயத்தில் லேட் பண்ணிக் கொண்டே இருந்தார் கவுதம். அது தயாராக இல்லையென்றால் கால்ஷீட் தருவதை பற்றி யோசிக்க வேண்டியிருக்கும் என்று அஜீத் முரண்டு பிடித்ததால் இருவரும் இணைந்து உருவாக்கும் படம் தள்ளிப் போனது. இடையில் நுழைந்து கொண்டார் சரண். இந்த முறையும் கவுதமின் பிடிவாதம் ஸ்கிரிப்ட் விஷயத்தில் தலை து£க்கியிருக்கிறதாம்.
ஆனாலும் அது தயாரான பிறகு பிற விஷயங்களை பேசிக் கொள்ளலாம் என்று மவுனம் காக்கிறாராம் தயாநிதி அழகிரி. காவல், காக்கி, துப்பறியும் ஆனந்த் என்று மூன்று தலைப்புகளை ஒரே படத்திற்கு வைத்து பல்லாங்குழி ஆடிக் கொண்டிருக்கிறது மீடியா. கதைசொல்ல வேண்டிய கவுதம் இன்னும் டைட்டில் விஷயத்திலேயே நொண்டியடித்துக் கொண்டிருக்கிறார். என்னவோ போங்க...
0 comments:
Post a Comment