
சிம்புவும் நயன்தாராவும் காதலித்து பிரிந்து விட்டனர். நயன்தாரா தற்போது பிரபுதேவாவுடன் நெருக்கமாக உள்ளார். சிம்புவோ திரிஷாவை விரும்புவதாக செய்திகள் வந்தன.
இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர். உதட்டோடு உதடு முத்தமிடும் காட்சிகளிலும் துணிச்சலாக நடித்து இருக்கிறார்கள். இருவரும் காதலிப்பதாக கிசு கிசுக்கப்படுகிறது. ஆனால் இதை சிம்பு மறுத்தார். அவர் கூறியதாவது:-
நான் காதல் வலையில் விழுந்திருப்பதாக வெளியான தகவல்களில் உண்மை இல்லை. யாரையும் காதலிக்கவில்லை. என் வேலையைத்தான் காதலித்துக் கொண்டு இருக்கிறேன். எனக்கு சாதாரண ஒரு பெண் போதும். அவள் சாதாரண உலகத்தில் இருந்து கிடைப்பதையை விரும்புகிறேன்.
“விண்ணைத் தாண்டி வருவாயா” படத்தில் என் கேரக்டரை ரொம்ப விரும்புகிறேன். அடுத்த படம் பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை.
கே.வி.ஆனந்தின் “கோ” படத்தில் நடிக்க திட்ட மிட்டேன். ஆனால் படப்பிடிப்பு துவங்கும் முன்பே ஒரு டைரக்டர் முடியை வெட்டு அதை செய் இதை செய் என்றெல்லாம் உத்தரவுகள் போடுவது பிடிக்கவில்லை. எனவே அப்படத்தில் இருந்து விலகி விட்டேன். ஒருவருக்கொருவர் மரியாதை கொடுத்து பழக வேண்டும் என்பதை முக்கியமாக கருதுகிறேன்.
இவ்வாறு சிம்பு கூறினார்.
0 comments:
Post a Comment