
மேடையேறிய பலரும் சொன்ன விஷயம் இதுதான். சிங்கத்தையும் புலியையும் ஒரு படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்கள். இது யாராலும் யோசித்தே பார்க்க முடியாத விஷயம். அப்படி யோசித்தாலும் அதை நிறைவேற்ற ஷங்கரால்தான் முடிந்தது என்றெல்லாம் பாராட்டுகள். தனது பேச்சில் இதற்கு பதிலளித்தார் பாரதிராஜா. இங்கு பேசும்போது எங்க ரெண்டு பேரையும் சிங்கம், புலின்னு சொன்னாங்க. இந்த படத்தை பொறுத்தவரை நாங்க ரெண்டு பேரும் சிங்கம் புலி தோலையெல்லாம் கழற்றி வைச்சுட்டு ஆட்டுக்குட்டிகளா ஆகிட்டோம். நடிக்கறது எவ்வளவு கஷ்டம்னு இந்த படத்துக்கு பிறகுதான் எனக்கு புரிஞ்சுது. நடிகர்கள் எல்லாம் ரொம்ப பாவம் என்றார். இந்த படத்தில நடிச்ச இருபது குழந்தைகளோட நாங்களும் சேர்ந்து இரண்டு குழந்தைகளாகிட்டோம் என்று அவர் சொன்ன போது பலத்த கைதட்டல்.
"நானாவது கொஞ்சம்தான் வர்றேன். ஆனால் படம் முழுக்க வர்றாரு பாரதிராஜா" என்று பாலசந்தர் சொல்ல வெடிச்சிரிப்பு சிரித்தார் பாரதிராஜா. முன்னதாக திரையிடப்பட்ட இரண்டு பாடல்களில் கார்த்திக்ராஜாவின் மெலடியும், செழியனின் ஓவியத்திற்கு நிகரான ஒளிப்பதிவும், தாமிராவின் கவிதைக்கு இணையான கற்பனையும் கலந்து கட்டி எதிர்பார்ப்பை எகிற வைத்தது.
0 comments:
Post a Comment