
காதல் கொண்டேன் படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி 7ஜி ரெயின்போ காலனி, திருட்டுப்பயலே உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை சோனியா அகர்வால். டைரக்டர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட சோனியா, திருமணத்துக்கு பின்னர் சினிமாவில் நடிப்பதை தவிர்த்தார். முழுக்க முழுக்க குடும்பத் தலைவியாக இருந்து வந்த சோனியா - செல்வராகவன் தம்பதிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் படத்தை இயக்கியபோது நடிகை ஆண்ட்ரியாவுடன் நெருங்கிப் பழகியதாகவும், இது சோனியா அகர்வாலுக்கு பிடிக்காததால் தம்பதியரிடையே சண்டை ஏற்பட்டதாகவும் செய்திகள் கசிந்தன. அதனைத்தொடர்ந்து இருவரும் பரஸ்பர விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு குடும்ப நல கோர்ட்டில் நடந்து வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. சோனியா - செல்வராகவன் தம்பதிக்கு விவாகரத்து வழங்கி கோர்ட் உத்தரவிட்டது.
விரும்பி கேட்ட விவாகரத்து கிடைத்ததை தொடர்ந்து செல்வராகனும், சோனியா அகர்வாலும் தனித்தனி காரில் உற்சாகமாக கோர்ட்டில் இருந்து புறப்பட்டு சென்றனர். கோர்ட்டில் இருந்து வெளியே வந்த இருவருமே பத்திரிகையாளர்களிடம் எதுவும் பேசவில்லை.
சமீபகாலமாக செல்வராகவனை விட்டு பிரிந்து வாழ்ந்த சோனியா அகர்வால், மீண்டும் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வேட்டையில் இறங்கியிருக்கிறார். பொது நிகழ்ச்சிகளுக்கு கவர்ச்சியான உடைகளை அணிந்து வந்து போஸ் கொடுப்பதில் தொடங்கி, விதவிதமான கெட்-அப்களில் எடுக்கப்பட்ட ஸ்டில்களையும் கோலிவுட், மல்லுவுட், டோலிவுட்களில் உலவ விட்டார். அதற்கு கைமேல் பலன்களும் வந்து குவியத் தொடங்கி விட்டதாக தகவல்.
0 comments:
Post a Comment