
யுனிக் புரொடக்ஷன் என்ற பட நிறுவனம் சார்பில் 2010 பாக்யராஜ் என்ற படத்தை தயாரித்து வரும் சோனா, இதற்காக பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது தனது புதிய படம் குறித்து பேசிய சோனாவிடம், நடிகை ரஞ்சிதா விவகாரம் குறித்து கேள்வி கேட்டனர். அதற்கு பதில் அளித்த சோனா, என்னை பொறுத்த வரைக்கும் அவர்கள் செய்ததில் குற்றம் இல்லை. அவர்கள் இருவரும் விருப்பப்பட்டுத்தானே அப்படி நடந்து கொண்டிருக்கிறார்கள், அவர்கள் விருப்பம் பற்றி நான் வேறு கருத்து எதுவும் சொல்ல விரும்பவில்லை, என்று கூறினார்.
சினிமாவில் பெண்களை அடிமைகளாக நினைக்கிறார்கள் என்று கூறிய சோனா, அந்த அடிமைத்தனத்தை மாற்றிக் காட்டுதற்காகவும், எங்களாலும் ஆட்சி பண்ண முடியும் என்பதை நிரூபிப்பதற்காகவும் படத்தயாரிப்பில் இறங்கியிருப்பதாக கூறினார். திருமணம் பற்றிய கேள்விக்கு, நான் ஆண்களை நம்ப மாட்டேன். எல்லோருமே காரியவாதிகள்.
நான் ஒளிவு மறைவு இல்லாதவள். திறந்த மனதுடன் பேசுபவள். என்னை எந்த ஆணும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதனால் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். யாராவது என்னிடம் வந்து, நீங்க அழகா இருக்கீங்க'' என்று வழிந்தால், நான் கண்டுகொள்வதில்லை. ஏறக்குறைய ஞானி ஆகிவிட்டேன், என்று கூறினார்.
0 comments:
Post a Comment