
எடிட்டர் ஏ. மோகன் வழங்க, ஜெயம் கம்பெனி தயாரிக்கும் புதிய படம் தில்லாலங்கடி. ஜெயம், எம்.குமரன் ஷி
ளி மகாலட்சுமி, சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம் ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய எம்.ராஜா இப்படத்தை இயக்குகிறார்.
மிகப்பெரிய வெற்றியடைந்த பேராண்மை படத்தைத் தொடர்ந்து ஜெயம்ரவி நடித்துக்கொண்டிருக்கும் படம் இது. ஜனரஞ்சகமான படமாக உருவாகிவரும் தில்லாலங்கடி படத்தில் தமன்னா கதாநாயகியாக நடிக்க, முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான ஷாம் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மற்றும் வடிவேலு, சந்தானம், மனோபாலா, மன்சூரலிகான், லிவிங்ஸ்டன், காதல் தண்டபாணி, தியாகு, சத்யன், மயில்சாமி, ஜான்விஜய், ஜெயப்பிரகாஷ், இயக்குநர் 'சங்கர்குரு' ராஜா, 'லொள்ளு சபா' மனோகர், சஞ்சிதா, சுஹாசினி, நளினி, லதாராவ், சந்திரா லஷ்மன் ஆகியோரும் நடிக்கிறார்கள். கௌரவ வேடத்தில் ராதாரவி நடிக்க, ஜெயம் ரவியின் தந்தையாக, மிக முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் பிரபு நடித்திருக்கிறார்.
தில்லாலங்கடி படத்துக்கு இசையமைப்பவர் யுவன்சங்கர்ரராஜா. இயக்குநர் எம்.ராஜாவும், யுவன்சங்கர்ராஜாவும் முதன்முறையாக இப்படத்தில் இணைகிறார்கள். இப்படத்தில் இடம்பெறும் அனைத்துப் பாடல்களையும் அற்புதமாக இசையமைத்து கொடுத்திருக்கிறார் யுவன். ஐந்து பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டநிலையில், அவற்றை இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜாவுக்கு திரையிட்டுக்காட்டினார் இயக்குநர் எம்.ராஜா. அவற்றைப் பார்த்த யுவன், எம்.ராஜாவை மனம்விட்டுப் பாராட்டியதோடு, மிச்சமிருக்கும் ஒரு பாடலுக்கு ஃபாஸ்ட் பீட்டில் இசையமைக்கலாம் என்று கருத்து தெரிவித்தார்.
சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் படத்தில் கோழி வெடக்கோழி பாடலைப்போல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த எம்.ராஜா, யுவனின் யோசனையை ஏற்றுக் கொணட்£ர். அந்தப்பாடலை யாரை பாட வைப்பது என்று ஆலோசித்தபோது, சிம்புவைப் பாட வைக்கலாம் என்று யோசனை சொன்னார் தில்லாலங்கடி படத்தின் நாயகனான ஜெயம்ரவி.
ட்யூனைக் கேட்ட சிம்பு உடனே பாடுவதற்கு தயாரானதோடு, மூன்று மணி நேரத்தில் அருமையாக பாடி முடித்தார்.
நா.முத்துகுமார் எழுதிய, பட்டு பட்டு பட்டாம்பூச்சி விட்டு விட்டு கண்ணாமூச்சி கண்ணுக்குள்ளே காதல் காட்சி நான் பார்த்தேனே என்ற பாடல் அந்தப்பாடலை மிகப்பிரம்மாண்டமான செட்டில், அறுபதுக்கும் மேற்பட்ட மும்பை மாடல்களை வைத்து படமாக்க இருக்கிறார். செட் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தில்லாலங்கடி படத்தின் படப்பிடிப்பு சென்னை, பாண்டிச்சேரி, மும்பை மற்றும் மலேஷியாவில் நடைபெற்று முடிந்திருக்கிறது. இப்படத்தின் இசை வெளியீடு விரைவில் நடைபெறவிருக்கிறது. ஏப்ரலில் வெள்ளித்திரைக்கு வருகிறது தில்லாலங்கடி. தொழில்.நட்ப தில்லாலங்கடிகள்: இசை: யுவன்சங்கர்ராஜா, ஒளிப்பதிவு: பி.ராஜசேகர், பாடல்கள்: நா,முத்துகுமார், விவேகா, சண்டைப்பயிற்சி: ராக்கி ராஜேஷ், கலை: மிலன், நடனம்: ஷோபி, படத்தொகுப்பு: ராம் சுதர்ஸன், தயாரிப்பு மேற்பார்வை: எம். செந்தில், தயாரிப்பு நிர்வாகம்: கருணாகரன், ஹரிஹரன் நிர்வாகத் தயாரிப்பாளர்: எல்.சசிகுமார் தயாரிப்பு: ஜெயம் கம்பெனி திரைக்கதை, வசனம், இயக்கம்: எம்.ராஜா
0 comments:
Post a Comment