
கோவாவுக்குப் பிறகு தனது வழக்கமான ஃபார்முலாவில் கதையொன்றை தயார் செய்தார் வெங்கட்பிரபு. மூன்று ஹிட் கொடுத்தாச்சே, இனியாவது ஃபார்முலாவை மாற்றி சோலோ ஹீரோவுக்கு ட்ரை பண்ணலாமே என்று ஸ்பீடு பிரேக்கர் போட்டார் தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா. இவர்தான் சரோஜா படத்தின் தயாரிப்பாளர். இவருக்குதான் அடுத்தப் படத்தை வெங்கட்பிரபு இயக்குகிறார்.
வெங்கட்பிரபுவைப் பொறுத்தவரை சிவா வெறும் தயாரிப்பாளர் மட்டுமல்ல. அதற்கும் மேலே. முதல் படம் சென்னை 28 வெற்றி பெறும் முன்பே வெங்கட்பிரபுவின் மீது நம்பிக்கை வைத்து அவருக்கு அட்வான்ஸ் கொடுத்தவர் சிவா. அவர் பேச்சை தட்ட முடியாதே.
தனது வழக்கமான ஸ்கிரிப்டை மூடி வைத்து பிரபல ஹீரோவுக்காக கோடம்பாக்க மசாலாவுடன் புதிய கதையொன்றை தயார் செய்திருக்கிறார் வெங்கட்பிரபு. இந்த மசாலாவுக்கு மஞ்சா குளிக்கப் போகும் ஹீரோ யார்? எல்லா ஹீரோவுமே பிஸியா இருக்காங்களே என்று தாடையை தடவிக் கொண்டிருக்கிறது வெங்கட்பிரபு அண்ட் டீம்.
0 comments:
Post a Comment