
இந்த சந்திப்புகள் எதற்கு, அடுத்தப் படத்திற்காகவா?
இல்லை. இது முழுக்க இலக்கிய ரீதியிலான சந்திப்பு. கமல் தனது மய்யம் பத்திரிகையை இணையத்தில் கொண்டு வருகிறார். அதில் பங்களிப்பு செலுத்தவும், அதை எப்படி வடிவமைக்கலாம் என ஆலோசனை கேட்கவுமே மேலே உள்ள இலக்கியவாதிகளை சந்தித்தார் கமல்.
ஏற்கனவே இரா.முருகள் உள்ளிட்ட ஒரு டீம் மய்யத்தை வடிவமைக்கும் வேலையில் தீவிரமாக உள்ளது. தொ.பரமசிவத்தின் மீது அதிக மரியாதை வைத்திருக்கிறார் கமல். அவரது ஆய்வு நூலில் படித்த விருமாண்டி என்ற கதாபாத்திரத்தை வைத்தே தனது படத்துக்கு விருமாண்டி என பெயர் வைத்தார் கமல். இணைய இதழாக வரும் மய்யத்தில் தொ.பரமசிவம் தொடர் ஒன்றை எழுதக் கூடும் என்கிறார்கள்.
சிறப்பான முயற்சி... வெற்றிபெற வாழ்த்துவோம்.
0 comments:
Post a Comment