
ரஜினி, நயன்தாரா, ஜோதிகா நடித்து வெற்றிகரமாக ஓடிய படம் சந்திரமுகி தெலுங்கிலும் இது ஹிட்டானது. சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரித்தது. பி.வாசு இயக்கினார்.
கன்னடத்தில் வெளியான ஆப்தமித்ராவின் ரீமேக்கே இப்படம். தற்போது ஆப்தமித்ரா படத்தின் 2-ம் பாகத்தையும் பி.வாசு எடுத்துள்ளார்.
இந்த படத்தை ரஜினி சமீபத்தில் பார்த்து சிறப்பாக இருப்பதாக பாராட்டினார். கிளைமாக்ஸ் காட்சிகளை வெகுவாக புகழ்ந்தார்.
எனவே அப்படத்தை தமிழில் சந்திரமுகி-2 என்ற பெயரில் “ரீமேக்” செய்ய பி.வாசு முடிவு செய்துள்ளார். இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடக்கிறது. இதில் நடிப்பதற்கு நடிகர்-நடிகைகள் தேர்வும் நடந்து வருகிறது.
ரஜினி இதில் நடிக்க பி.வாசு தரப்பில் பிரியப்படுகின்றனர். ஆனால் அவர் நடிப்பாரா? என்பது உறுதியாக தெரியவில்லை. ரஜினி நடித்தால் முன்னணி நடிகைகள் கதாநாயகிகளாக ஒப்பந்தம் செய்யப்படுவார்கள் என்றும் மெகா பட்ஜெட்டில் தயாராகும் என்றும் கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment