
கவுதம் வாசுதேவ மேனனும், ஹாரிஸ் ஜெயராஜும் பிரிந்தனர். காரணம் என்னவாக இருக்கும் என்று மென்று துப்பியது மீடியா. ஆனால் ஒருவார்த்தை கூட ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லிக் கொள்ளவில்லை. இந்த நாகரீகம்தான் மறுபடியும் இணைய வைத்திருக்கிறது இவர்களை.
கடந்த வாரத்தில் ஒரு நாள் திடீரென்று போய் நின்றார் கவுதம். எங்கே தெரியுமா? ஹாரிசின் ஒலிப்பதிவு கூடத்தில். எவ்வித அறிவிப்பும் இல்லாமல் கவுதம் வந்ததால் திக்குமுக்காடி போனார் ஹாரிஸ். மணிக்கணக்கில் உட்கார்ந்து பேசினார்கள் இருவரும். எல்லா அழுக்கையும் நீக்குகிற அற்புதமான சோப்பு, மனசுதானே? நடந்த தவறுகளுக்கு என்ன பிராயசித்தமோ, அதை செய்து விட்டார்களாம் இருவரும். கவுதம் இயக்கப்போகும் அடுத்த படத்தில் ஹாரிஸ்தான் மியூசிக்.
ரஹ்மானும் கவுதமும் ஏன் பிரிந்தார்கள் என்று அடுத்த முணுமுணுப்பை ஆரம்பிக்காமல் இருந்தால் சரி.
0 comments:
Post a Comment