தற்போது சரத் பொன்சேகா வேறொரு கட்சியில் இருக்கம் போது, அவரது விடுதலை தொடர்பில் எதுவும் செய்ய முடியாது என ஐக்கிய தேசிய கட்சி கூறிவரும் நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எனினும் குறிப்பாக எந்த கட்சியும் சரத் பொன்சேகாவை விடுவிப்பது தொடர்பில் அக்கறை கொள்ளவில்லை என உறுதியாக தெரிவிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் மேலும் சில கட்சிகள் தம்மிடம் சரத் பொன்சேகா தொடர்பில் விசாரிக்கவில்லை எனவும், இதனை தாம் எதிர்பார்க்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னர் அனைத்து தரப்பினரும் தமக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு சரத் பொன்சேகாவின் நிலவரம் குறித்து விசாரித்து வந்ததாகவும், ஆனால் தற்போது அவர்களின் வேலைப்பழு நிமித்தம் அவ்வாறு யாரும் விசாரிப்பதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment