Latest Games :
Home » » அஜித்தின் 50வது பட சிக்கல்!!

அஜித்தின் 50வது பட சிக்கல்!!

Friday, March 12, 2010 | 1comments

அசல் படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் நடிக்கவுள்ள புதியபடம் ஜேம்ஸ்பாண்ட் பாணியில் எடுக்கப்படவிருக்கிறதாம்.

அசல் படம் ரீலிசான நிலையில் முதல்வருக்கு நடந்த பாராட்டு விழாவின்போது அஜித் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதில் மனமுடைந்த அஜித் இனி சினிமாவை விட கார் ரேஸில் கவனம் செலுத்தப்‌ போவதாக கூறியதுடன், இனி கேமரா முன் நிற்க வேண்டுமா? என்ற கேள்வியும் என் மனதில் எழுகிறது என வேதனையுடன் கூறினார். பின்னர் முதல்வர் கருணாநிதியின் தலையீட்டில் பிரச்னை சுமூகமாக முடிந்தது.

இதனைத்தொடர்ந்து அஜித், டைரக்டர் கவுதம் வாசுதேவன் மேனன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கப்போவதாக முதலில் செய்திகள் வெளியாகின. பின்னர் அஜித்தின் 50வது படமான அந்த படத்துக்கு துப்பறியும் ஆனந்த் என ‌பெயரிடப்பட்டிருப்பதாக கூறப்பட்டது. இப்போது துப்பறியும் ஆனந்த் என்பது அஜித் பட டைட்டில் இல்லை என்று கூறப்படுகிறது. கவுதம் வாசுதேவ் மேனன் எடுக்கவுள்ள ஒரு துப்பறியும் கதைக்காக இந்த தலைப்பை பதிவு செய்து வைத்திருக்கிறாராம். அது வேறு புராஜக்ட் என்று அவரே கூறி விட்டார். சரி... அப்போ அஜித் படத்துக்கு என்ன டைட்டில்? காக்கி! - இதுதான் அஜித்தின் 50வது பட டைட்டிலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இதிலும் ‌சின்ன சிக்கல் இருக்கிறதாம். காக்கி என்ற பெயரை ஏற்கனவே ஒரு நடிகர் பதிவு செய்திருக்கிறாராம். இதனால் அந்த டைட்டில் கிடைக்குமா என்று சந்தேகத்தில் இருக்கும் கவுதம், போலீஸ் என்ற தலைப்பையும் தேர்ந்தெடுத்திருக்கிறார். அந்த ‌தலைப்பு தற்போது நடிகரும் இயக்குனருமான தியாகராஜனிடம் இருக்கிறது. அவர் தனது மகன் பிரசாந்தை வைத்து போலீஸ் என்ற படத்தை கடந்த நான்கு ஆண்டுகளாக இயக்கி வருகிறார்.

எனவே அஜித்தின் புதுப்பட டைட்டில் வில்லங்கமாகவே இருக்கிறதாம். யாராவது விட்டுக் கொடுத்தால் காக்கி, ‌போலீஸ் ஆகிய தலைப்புகளில் ஒன்றை வைக்க திட்டமிட்டிருக்கிறார் டைரக்டர் கவுதம் வாசுதேவ் மேனன். இந்த படம் ஜேம்ஸ்பாண்ட் பாணியில் உருவாகவிருக்கிறது என்பது எக்ஸ்ட்ரா தகவல்.
Share this article :

1 comments:

  1. ஜேம்ஸ்பாண்ட் பாணியில் அஜித் அப்ப நடிக்க பழக லாம்

    ReplyDelete

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Suren Pages - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger