
குற்றாலத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
அஜித்குமாரின் ரசிகர், சண்டைப் பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கத்திற்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக அஜித்குமாரிடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
பொதுவாக நடிகர் சங்க உறுப்பினர்களிடையே ஏற்படும் பிரச்னைகள் குறித்து விளக்கம்தான் கேட்க முடியும். இதேபோன்று நடிகர் சிங்கமுத்துவிற்கும், வடிவேலுவிற்கும் இடையே பிரச்னை ஏற்பட்டபோதும் அவர்களிடம் விளக்கம்தான் கேட்கப்பட்டது.
அஜித்குமார் பேசியது தொடர்பாக நடிகர் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம், பெப்சி சங்கத்தினர் கலந்தாலோசித்து, இதுகுறித்து வேறு எந்தவிதமான பேட்டிகளோ, கருத்துகளோ தெரிவிக்க கூடாது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்திற்கு கண்டனம் தெரிவித்தும், நடிகர் அஜித்குமார் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. நடிகர் அஜித், வருத்தம் தெரிவிக்க எந்தவிதமான காலகெடுவும் நிர்ணயிக்கப்படவில்லை.
0 comments:
Post a Comment