
இது தொடர்பில் யாழ் தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது:
தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரிவுகளை சந்தித்துள்ளதாகவும், எதிர்வரும் பொதுத்தேர்தலில் அது பல புதியவர்களை முன்நிறுத்த உள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளிவருவதை தொடர்ந்து யாழ் மக்கள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
1976 ஆம் ஆண்டு தமிழர் ஐக்கிய விடுதலை முன்னனி வட்டுக்கோட்டை தீர்மானத்தை முன்வைத்திருந்தது. எனவே தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொள்கை என்ன என்பதை அந்த கட்சி விளக்க வேண்டும்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக உறுப்பினர்களை தெரிவுசெய்யும் பொருட்டு பெருமளவான தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ளனர்.
புதியவர்களை சேர்த்துக்கொள்ளும் பொருட்டு சில மூத்த உறுப்பினர்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு புறம்தள்ள முயல்வதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கை கட்சியில் பிளவுளை தோற்றுவித்துள்ளது.
இனப்பிரச்சனைக்கான தீர்வை தயாரிப்பதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு தலைவர் ஆர் சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் ஈடுபட்டுள்ளதாகவும், ஆனால் அவர்கள் அதனை தேர்தலுக்கு முன்னர் வெளியிட வேண்டும் எனவும் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் இனப்பிரச்சனைக்கான தீர்வு தெடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன என்பது தெரிந்தால் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் தமது விருப்பத்தை கைவிட தாம் தயாராக உள்ளதாக யாழ் மாவட்டத்தை சேர்ந்த கல்விச்சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.
எனினும் வட்டுக்கோட்டை தீர்மானத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுதியாக பின்பற்ற வேண்டும் என யாழ் சமூகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதனிடையே, நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு வழங்கப்பட்ட பாதுகாப்புக்களை அரசு விலக்கிக்கொண்டதை தொடர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் மீண்டும் கொழும்பு செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தமக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment