
முதல்வருக்கு சமீபத்தில் நடந்த பாராட்டு விழாவில் பேசிய ரஜினி வழக்கம்போல ஒரு குட்டிக் கதை கூறினார். ஒருவன் ஹோட்டலில் சாப்பிடப் போகிறான். ஐம்பது ரூபாய்தான் அவன் பட்ஜெட். ஆனால் ஹோட்டல் வாசலில், நீங்கள் சாப்பிடும் உணவுக்கு பணம் தர வேண்டாம், அதை உங்கள் பேரன் தருவான் என எழுதப்பட்டிருப்பதைப் பார்ப்பவன் ஐம்பது ரூபாய்க்கும், தனது தேவைக்கும் அதிகமாகவே சாப்பிடுகிறான்.
சாப்பிட்டு முடித்தவனிடம் பணம் கேட்கிறார்கள். அவன் போர்டில் எழுதியிருப்பதைக் காட்டி, என் பேரன் தருவான் என்கிறான். ஆனால் ஹோட்டல்காரரோ, நாங்கள் கேட்டது நீங்கள் சாப்பிட்டதற்கான பணம் அல்ல, உங்க தாத்தா சாப்பிட்டதுக்கான பணம் என்று அனைத்தையும் அவனிடமிருந்து பறித்துக் கொள்கிறார்.
இலவசமாகக் கிடைக்கிறது என்று பேராசைப்பட்டால் நம்மிடம் உள்ளதும் போய்விடும் என்பதை விளக்க இந்தக் கதையை ரஜினி கூறினார். இந்தக் கதையை தனது கல்லூரி காலங்கள் படத்தில் காமெடி காட்சியாக்கியிருக்கிறார் இயக்குனர் ரெமோஷிவா.
ரஜினிக்கு ராயல்டி கொடுத்திட்டீங்களா?
0 comments:
Post a Comment