
இதுவரை பார்க்காத வேறொரு ஸ்டைலில் இந்த படத்தை தரப்போகிறாராம் அமீர். இது வில்லேஜ் கதையல்ல என்பது முதல் சந்தோஷம். அதுவும் மதுரையில் நடக்கிற கதை அல்ல என்பது இரண்டாவது சந்தோஷம்.
மதுரையில மட்டும் பதினைஞ்சு படத்தோட ஷ§ட்டிங் நடந்திட்டு இருக்கு. இன்னும் கொஞ்ச நாளைக்கு நான் மதுரை பக்கம் போறதா இல்லை என்றார் அமீர். எத்தனையோ தயாரிப்பாளர்கள் உங்களோடு சேர்ந்து படம் பண்ண தயாராக இருந்தும் ஏன் அன்பழகனை தேர்ந்தெடுத்தீங்க? என்ற இன்னொரு கேள்விக்கு அமீர் சொன்ன பதில் அநியாயத்துக்கு சேஃப்ட்டி.
நான் இயக்குகிற படங்களை நானே தயாரிப்பதுதான் என்னோட வழக்கம். முதன் முதலா வேறொரு தயாரிப்பாளருடன் படம் பண்றேன். ஏன்னா நான் சொன்ன கதைக்கு பட்ஜெட்டை பெரிசா நினைக்காத தயாரிப்பாளர்தான் வேணும். அன்பழகன் ஒரு நல்ல சினிமா ரசிகர்ங்கிறதை அவருடன் பேசிய முதல் சந்திப்பிலேயே தெரிஞ்சுகிட்டேன். இரண்டாவது சந்திப்பிலேயே நான் உங்களுக்கு படம் பண்றேன் என்ற சொல்லிட்டேன். இந்த படத்தை நீங்க நினைச்ச மாதிரி எடுங்கன்னு சொல்லிட்டார். படத்தை பொங்கலுக்கு கொண்டு வந்திரணும் என்ற முனைப்பில் எல்லாரும் வேகமா செயல்படுறோம் என்றார்.
படத்தின் நாயகன் ஜெயம் ரவி, அமீர் பட விதிமுறைகளை மீறாமல் தாடி வளர்க்கப் போகிறாராம். இவருக்கு ஜோடி? ப்ரியாமணியா கூட இருக்கலாம் என்றார் அமீர். பருத்தி வீரனை விட்டு அவர் விலகி வந்தாலும், முத்தழகிய மட்டும் அவர் மறக்கவே இல்லை!
0 comments:
Post a Comment