Latest Games :
Home » » குழந்தை தமிழில்தான் பேச வேண்டும் : அஜீத்

குழந்தை தமிழில்தான் பேச வேண்டும் : அஜீத்

Wednesday, February 24, 2010 | 0 comments

திடீரென்று, நீ தமிழனா என்ற கேள்வியோடு விமர்சனங்கள் விரட்டுவதை கண்டு அதிர்ந்து போயிருக்கிறாராம் அஜீத். இதற்கு பதிலளிப்பதை விட பொறுமையாக இருப்பதே நல்லது என்று இப்போதைக்கு அவரை அமைதிகாக்க சொல்லியிருக்கிறார்களாம் அவரது நலம் விரும்பிகள்.

அதே நேரத்தில் ஈழ பிரச்சனையின் போது வெளிப்படையாக கருத்து தெரிவிக்காவிட்டாலும், ஒவ்வொரு நாளும் செய்தி தாளை பார்த்து அவர் கண்கலங்கியது எங்களுக்குதான் தெரியும் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். தனது மகள் அனோஸ்கா வீட்டில் தமிழில்தான் பேச வேண்டும் என்று கண்டிப்பாக பேச வைத்துக் கொண்டிருப்பவர் அவர்.

அதுமட்டுமல்ல, தன்னையும், ஷாலினியையும் மம்மி, டாடி என்று அழைக்கக் கூடாது. அம்மா அப்பா என்றுதான் அழைக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்து அதன்படியேதான் பேச வைத்திருக்கிறார் குழந்தையையும். அவரை பார்த்து இப்படி ஒரு விமர்சனம் வருவது வருத்தத்தை தருகிறது என்கிறார்கள் அவர்கள்.

தற்போதைய பிரச்சனை தானாக அமுங்கிவிடும். நாம் பேசாமல் இருந்தால் போதும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம் அஜீத். முன்பு பேசினால் பிரச்சனை. இப்போது பேசாவிட்டால் பிரச்சனை. என்ன செய்யப் போகிறாரோ?
Share this article :

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Suren Pages - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger